புதன், 17 மே, 2017

கண் ஒளி யோகா பயிற்சி வகுப்பு

கண் ஒளி யோகா பயிற்சி 

கீழ்கண்ட கோளாறு உள்ளவர்கள் இப் பயிற்சி பெறலாம்.
  • 1.        கிட்டப்பார்வை
  • 2.        தூரபார்வை
  • 3.        மாறுகண்
  • 4.        கண்ணீர் கசிதல்
  • 5.        கண் அழுத்தம்
  • 6.        வெள்ளெழுத்து
  • 7.        கண் தலைவலி
  • 8.        கண் மங்கல்
  • 9.        கண்ணாடி நீக்க
  • 10.     வினோத குறிகள்

கண் யோகா ஏன் தேவை ?  இன்றைய அவசரகால வாழ்வில் கண்களைப் பற்றிய கல்வி அவசிய மானது. நாம் பார்க்கும் இருபது நபர்களில் ஒருவர் கண்ணாடி அணிந்து இருக்கிறார். கண்களின் வழியே உலகத்தை பார்க்கிறோம். நோய் வந்த பின்னே கண்களை கவனிக்கின்றோம். நாம் அதிகமாக கண்களின் வழியே அறிவயும் அனுபவத்தையும் பெறுகிறோம். உயிர் உள்ளவரை கண்பார்வை தெளிவு தேவை.. இன்றைய விஞ்ஞான உலகத்தில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மருத்துவ முறையிலும் அறுவை சிகிட்சை முறையிலும் குணம் பெறுவது அரிது. கல்வி எனும் அறிவை கண்களின் உதவியால்தான் கற்கிறோம். கண்களே மனதின் சாளரம்.உலக அறிவை பெற கண்களே வழி. வழி அடைப்பின்றி சுத்தமாக இருக்க வேண்டும். வாருங்கள் கண் யோகம் கற்போம்.                                              

கண் யோகாவின் பயன்.   பார்வை திறன் அதிகரிக் கிறது. கவன ஒரு முகபடுத்தமுடிகிறது அதி விரைவாக படிக்க முடிகிறது. நகரும் பொருளை நன்றாக பார்க்க முடிகிறது. கண்களில் உள்ள வியாதி நீங்குகிறது. கம்யுட்டர் பார்ப்பதால் உள்ள கண் சோர்வு நீங்குகிறது. கண்கள் காய்ந்து விடும் தன்மை இல்லை. அககாட்சி தன்மை ஏற்படுகிறது. ஆன்மீக ஞானம் தெளிவடைகிறது.கற்று கொடுக்கபடும் பயிற்சியை 100 நாட்கள் தினம் 30 நிமிடம்  செய்துவர வேண்டும். கண்கள் இயற்கையாக சக்தி பெறும்.கண் நோய்கள் குணமடையும். தினசரி கண் சோதனையில் தெரியும்

பயிற்சி வகுப்பு நடைபெறும இடம் : பிராணா சிகிட்சை நிலையம். 25/27 . பென்னர் காலனி ,விரட்டிப்பத்து  மதுரை - 16

 வகுப்பு : திட்டமிட்ட தேதிகளில் கூட்டு  வகுப்பும் , தனிநபருக்கு சிறப்பு வகுப்பும் உண்டு .                                                                                                                                                                                                                                                       
பயிற்சி ஆசிரியர்
Hr.G.Venkatesan PG DIP in yoga,Msc in Yoga, SMP
www.cureyogainida.com
செல் : 9940676964 , 9364442500

செவ்வாய், 14 மார்ச், 2017

பணியாளர்ககுக்கு பணியிடத்தில் யோகா பயிற்சி

பணியாளர்ககுக்கு  பணியிடத்தில் யோகா பயிற்சி



ஏன் பணியாளர்களுக்கு
பணியிடத்திலேயே யோகா பயிற்சி தரவேண்டும் ? 





 அலுவலக மற்றும் ஊழியர்களுக்கு  அவர்களின் பணியிடத்திலேயே    யோகப்பயிற்சி அளிப்பது  இப்போது பிரபலமடைந்து வருகிறது.வர்த்தக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் யோகாவின் பயனை உணர துவங்கி விட்டனர்... நாங்கள்  வேலையின் போது ஏற்படும் மனஅழுத்தம் சமநிலை பெற மற்றும் ஆரோக்கிய திட்டத்தின் ஒருபகுதியாக யோகா பயிற்சி அளிக்கிறோம்.இன்று உற்பத்தியில் முன்னணியில் நிற்கும்

ஆப்பிள் ,கூகிள் மோட்டோரோலா எச் பி ஓ போன்ற
வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கின்றனர்.
பணியிடத்திலேயே யோகா பயிற்சி அளிப்பது  அவர்கள்   யோக நிலையத்திற்கு வந்து செல்லும்நேரத்தை மிச்சப்படுத்துகிறது. மேலும் பணியிட யோகா மன அழுத்தத்தை மற்றும்  வேலையின்போது  நாள் முழுதும் சுறுசுறுப்பு  ,மேலும் சிறப்பு உறுப்பு பாதுகாப்பு பெற உதவுகிறது. யோகாவின் மிக முக்கியமான பயன் எதுவெனில் விழிப்புணர்வு ஆகும். விழிப்புணர்வு அற்றவர்களே பணியிடத்தில் குடும்பத்தில் விரைவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த விழிப்புணர்வு பொறுப்புணர்வை தருவதுடன் வேலையை வாழ்க்கையை நிர்வாகம் செய்ய முடிகிறது. இந்த பயன்கள்  கலந்து கொள்ளும் ஒவ்வெருவருக்கும் இயற்கையாகவே யோகா பயிற்சியால் வளம் பெற்று தனது அறிவை உழைப்பை நிறுவனத்திற்கு வழங்குவார்கள்.
முறையான தொடர்ந்த பயிற்சி பணியாளர்களின் உடலில் மனதில் மேம்பட்ட ஆரோக்கியத்தை  சக்தியை   ஏற்படுகிறது. உற்பத்தி திறனை அதிகரிக்கிறது.
மற்ற உடற்பயிற்சிகளை போலல்லாமல் யோகா தனித்துவமாக  உடல் பலம் ,வளையும் தன்மை கவனஒருமுகப்படும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது.உடல் களைப்பு ,மனஅழுத்தம், வேலையில் பதட்டம் ஆகியவற்றை குறைக்கிறது. கூடுதலாக சோர்வை நீக்கி சக்தியை அளிக்கிறது.இவை அனைத்தும் உற்பத்தி திறனை அதிகரிக்க மனஉறுதியை வழிவகுக்கும்.. அலுவலக சூழலுக்கு ஏற்ற படி பல்வேறு திறன் மட்டங்கள் திறன்களை மாற்றியமைக்க எளிய யோகப்பயிற்சியால் முடியும்.


நிறுவனம் பெறும் நன்மைகள்
''யோகா''  கவனம் செலுத்த ,நம்பிக்கையை பெற  மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கும்  ஒரு அற்புதமான  திறன்வாய்ந்த நேர்மறையான சக்தி  இதனால் அதிக உற்பத்தியும் ,இணைக்க்கமான சூழலையும் கொண்டுவர முடியும். பணியாளர்கள் மனதில் மகிழ்ச்சியாக அவரவர் இலக்கினை அடைய கவனத்துடன் பணியாற்றுவர்.உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பொருளும்  மூலத்திட்டத்தோடு ஒத்திருக்கும்.
யோகா பயிற்சியை வழங்குவதனால் நிறுவனத்திற்கு மட்டுமல்ல  பணியாளர்களை இயக்குவதில் நிறுவனங்களுக்கும் செலவு குறையும்.
யோகா பயிற்சியினால் பணியாளர் மற்றும் நிறுவனம் இடையே உள்ள உறவு அதிகப்படும். இதனால் நிறுவனத்தின் வருட இலக்கை உணர்ந்து பணியாற்றுவார்.தேவையற்ற விடுப்புகளை எடுக்க மாட்டார். அவர் மனது நிறுவனத்துடன் ஐக்கியப்படும்.
யோகா பயிற்சியினால் பணிசெய்யும் இடத்தில் கூருணர்வு மற்றும் கவன ஒருமுகத்தோடு பணியாற்றுவார். இதனால்  பணியிட விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவு.

பணி மனஅழுத்த பிரச்சனையால் நிறுவனங்களுக்கு  வருடத்திற்கு 10முதல் 20 சதவீதம்    பணியாளர் தேவையற்ற விடுப்பு எடுத்தல் , குறைக்கப்பட்ட உற்பத்தி     ஊழியர் அடிப்படை செலவு,மருத்துவ செலவு ,  சட்ட செலவு ,  காப்பீடு ஆகியவையால்  செலவு ஆகிறது. இது அதிக பட்சமாக இச் செலவு குறையும்.
மன அழுத்தமே அனைத்து நோயின் பிறப்பிடம். அது நீங்கும் மேலும் மனஅழுத்தம் உடைய ஒருவர் தனது வார்த்தையால் மற்றவர்களயும் பணியிடத்தையும் பதட்டமடைய செய்வார். இது தவிர்க்கப்படும் .

காலப்போக்கில் ஏற்படும் பார்வை தெளிவின்மை ,அதிக நேரம் நிற்கஇயலாமை ,நடக்க இயலாமை ,தொப்பை ,அதிக எடை ,இரத்த அழுத்தம்,சர்க்கரைவியாதி , போன்ற மருத்துவ பிரச்சினைகளினால் இவர்கள் உற்பத்தியற்ற பிரிவில் பணிபுரிந்தாலும் நிறுவனங்களுக்கு கூடுதல் பணவிரயமே.. இதை தவிர்க்க அல்லது நீக்க யோகா பயிற்சி அவசியம் தேவை.
உடல் ஆரோக்கியத்தால் மருத்துவ காப்பீட்டு செலவு குறையும் அல்லது இருக்காது. இதனால் பணியாளர் சேமிப்பு அதிகரிக்கும்..
பணியாளர்களின் உடல்பலம் மூளைபலம் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடை  மற்றும் இயங்கும் வேகம்  இவையே ஒரு நிறுவனத்தின் முதுகுஎலும்பு பலமாகும்.
ஒரு மரத்தின் வேர் எத்தனை பலமாக உள்ளதோ அதை பொறுத்தே அதன் விளைச்ச்ல்  இருக்கும். அதுபோல பணியாளர் ஆரோக்கியத்தை பொறுத்தே உற்பத்தி திறன் இருக்கும்.
ஆரோக்கிய பராமரிப்பு செலவை குறைக்க பணியிடத்திலேயே யோகா பயிற்சி அளிப்பதனால் செலவு குறையும் மேலும் இது   புதுமையான அதிநுட்பமான தீர்வு ஆகும்.
பணியிடத்திலேயே பணியாளர் மனதை இலகுவாக்குதல் அவரின் உடல் மனா மேம்பாட்டிற்கு உதவும்.இது நிறுவனத்திற்கு ஒரு சொத்தாகும் நிறுவனத்தின் எதிர்கால வியாபார அல்லது உற்பத்தி விரிவாக்கத்திற்கு பணியாளர் ஆரோக்கியம் அடிப்படை ஆதாரமாகும். ஆரோக்கியத்திலிருந்து பலம் பிறக்கிறது.

ஊழியர்களுக்கு யோகாவினால் கிடைக்கும் நன்மைகள் 

  • கவனம் ஒருமுகப்படுகிறது.முடிவெடுக்கும் திறன் மற்றும் பல்முக பணிசெய்தல் 
  • பல்வேறு விஷயங்களால் ஏற்படும்  மனஅழுத்த  பிரச்சனைகள் வருவதில்லை இதனால் விடுப்பு எடுப்பதில்லை.
  • உஷார் நிலை மற்றும்  உற்பத்தியும் மேம்படுகிறது, கோரும் சூழ்நிலைகளில் மிக அமைதியாக நடை பெறுகிறது.
  • தலை கழுத்து முதுகு மற்றும் பல இடங்களில் உள்ள பிடிப்புகள் தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் மற்றும் வேலை சார்ந்த உடல் உபாதைகள் ஒரே தன்மையான வேலையினால் ஏற்படும் உடல் உபாதை பிரச்சனைகள் பணி சுற்றுப்புற சூழலால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்,இவை அனைத்திலிருந்தும் விடுதலை 
  • அற்புதமான வாடிக்கையாளர் சேவை அளிக்க உதவுகிறது.
  • அணுகுமுறையும் தோற்றமும் மேம்படுகிறது 
  • பணியிடத்தில் நல்வாழ்வை ஏற்படுத்துகிறது.


உங்கள் ஊழியர்கள் பங்கேற்க யோகா அனுபவம் தேவையா ?
இல்லை இல்லவே இல்லை பணியாளர்களுக்கு  எந்த யோகா அனுபவமும் தேவை இல்லை.யோகபயிற்சி பணியாளர்களுக்கென  வடிவமைக்கப்பட்டது. பணியின்போது ஏற்படும் உடல் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அளிக்கப்படுகிறது.

எப்பொழுது யோகா வகுப்பு இருக்கும்  ? - வேலை நேரத்திற்கு பிறகு மட்டுமே 
உங்கள் பணியிடத்தில் உங்கள் பணிநேரம் முடிந்த பிறகு துவங்கும். இந்த வகுப்பு முப்பது நிமிடம் அல்லது நாற்பத்து ஐந்து நிமிடம் அல்லது அறுபது நிமிடம் இருக்கும்.உங்கள் தேவைக்கு தக்கபடி உங்கள் பணியிடத்தில்  அமைதியான சூழலில் நடைபெறும். 
கீழ்கண்ட நுட்பங்கள் 'நிறுவன யோகா' பயிற்சியில் அளிக்கப்படும்.
  • பணியின்போது ஏற்படும் விபத்து -காயம் தடுப்பு பயிற்சிகள் 
  • மேஜை மற்றும் நாற்காலி யோகா பயிற்சிகள் 
  • எளிய உடல் பலமூட்டும் பயிற்சிகள் - மூச்சுப்பயிற்சிகள் 
  • கவன ஒருமுக படுத்தும் பயிற்சிகள் 
  • கண் பாதுகாப்பு யோகா பயிற்சிகள் 
  • கால் மற்றும் தனி உறுப்பு கவன யோகா பயிற்சிகள் 
இந்த பணியிட யோக பயிற்சி திட்டம்  உணவு இடைவேளைக்கு பிறகு பணித்துவங்கும் முன் அல்லது பின் அல்லது உங்கள் வசதிக்கு ஏற்ப வைத்து   கொள்ள்ளலாம்.

நாங்கள் உங்கள் பணியிடத்தில் யோகா பயிற்சி அளிக்க என்ன தேவை ?
உங்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க தகுந்த அறை அல்லது போதுமான தேவை   அது எத்தனை  நபர்கள்  என்பதை பொறுத்து அமைத்து கொள்ளலாம். மாணவர்கள் பனியன் பான்ட் மற்றும் டி சர்ட் அணிந்து கொள்ளாலாம் நிறுவன சீருடை இலகுவாக இருப்பின் அதையே பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு வருக்கும் தனி யோகா விரிப்பு அவசியம் தேவை .வீட்டில் இருந்து படுக்கை விரிப்பும் எடுத்து வரலாம்.

இதற்கு  கட்டணம் என்ன ?
இதில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை ,வாரத்திற்கு எத்தனை வகுப்புக்கள் என்பதை பொறுத்து கட்டணம் மாறுபடும். குறைந்த பட்சம் பத்து மாணவர்கள் அதிகம் நூறு மாணவர்கள் ஒரு வகுப்பிற்கு இருக்கவேண்டும். உங்கள் இலக்கு மற்றும் கேள்விகளுடன் எங்களை தொடர்பு கொள்ளவும்.




  







cell : 9940676964,9364442500