ஞாயிறு, 7 மார்ச், 2021

ஹீலிங் என்றால் என்ன ?

ஹீலிங் என்றால் என்ன  ?

"ஹீலிங்" என்பது மருந்து இன்றி மாத்திரை இன்றி ஒரு மனிதனின் பிராண ஆற்றலை கொண்டு செய்யப்படும்  சிகிச்சை முறையாகும். மனிதனின் ஸ்தூல உடலை தொடாமல் சூக்சும சரீரத்தை உணர்ந்து அறிந்து செய்யும் சிகிச்சை முறையாகும் .  

ஸ்துல  கண்களுக்கு  தெரியாத அதே சமயத்தில் சூக்சும கண்களால் அறிய கூடிய பயிற்சி முறைகள் உள்ளது .  மனித உடல் இயக்கம் சூக்சும    சரீரத்திலேயே உள்ளது .  அதில் உள்ள இயங்கு முறைகள் சீர் கெடும் போது  பல நோய்கள் உருவாகிறது.

ஒரு  நோய் உருவாகும் போது  அங்கே எதோ சில பிராண சக்தி செல்லவில்லை என அறிந்து கொள்ள வேண்டும் . பிறப்பிற்கும் இறப்பிற்கும் பிராணாவே  காரணமாகிறது. 

மனிதன் எந்த நோய் வந்த உடனேயும்  இறந்து விடுவதில்லை ,படிப்படியாக நோய் தன்மை அதிகரித்து பின் இறக்கிறான். ஆனால்  உடல்   எந்த விநாடியிலும்  சுயமாக அவனை காப்பாற்ற வேலை செய்து கொண்டே இருக்கிறது.  அதை அறியாமல் அவன் எடுத்து கொள்ளும் மருந்து மற்றும் உணவுகள் அதை குணப்படுத்தவோ அல்லது மேலும் சீர்கெடவோ  செய்கிறது .  

மருந்து என்பது மறுஉந்து  சக்தி ஆகும். அதை  தொடர்ந்து பயன்படுத்துவது தவறு .மனித உடலில் இயல்பு உந்து சக்தி உள்ளது . அதை அதிகரித்து கொள்ள வழி கண்டு பிடிக்க வேண்டும். இதற்கு "ஹீலிங்" உதவுகிறது . உடல் நோய்கள் மற்றும் மன நோய்கள் ஹீலிங் செய்வதினால் குணம் பெறலாம் . 





Cure yoga Healing Center
25/27. Fenner Colony, Virattipathu
Madurai _625016
Cell Phone : 99406 76964 , 9364442500

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக